உள்நாடுசூடான செய்திகள் 1

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்க இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) தள்ளுபடி செய்தது.

அதற்கமைய, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு, கடந்த12 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லாபர் தாஹிர் மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இன்று காலை மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது

Related posts

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதி

வவுனியாவில் குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 584 ஆக உயர்வு [UPDATE]