உலகம்சினிமா

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

58 வயதான அவர் தற்போது வைத்தியர்களின் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்பட்டது.

இதை அடுத்து உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக சாய்ரா பானு தெரிவித்து இருந்தார்.

மேலும் சாய்ரா பானுவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உதவியதாக தகவல்கள் வெளியானது

Related posts

ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

இந்தியா – டில்லி தீ விபத்தில் 35 பேர் பலி

இந்திய பெருங்கடலில் சீனா ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம்