வாரியபொல – புத்தளம் வீதியின் பலாபத்வல பிரதேசத்தில் நேற்று (14) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.
வாரியபொலவில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த லொறியொன்று வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்ட போது, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று லொறுக்கு பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 44 வயதுடைய வீதிகுளிய பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் வாரியபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.