5 வருடங்களாக அக்கரைப்பற்று பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் நேற்று (14) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸாரினால் 2020 ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களாக திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர் திறந்த பிடியாணை மூலம் தேடப்பட்டு வந்துள்ளார்.
திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபர் சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடுவதாக சம்மாந்துறை பொலிஸ் விசேட புலனாய்வு அதிகாரிகளினால் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்கவின் பணிப்புரைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் அறிவுறுத்தலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான சார்ஜன் ஐ.எல்.எம். இஸ்மாயில், பொலிஸ் உத்தியோகத்தர் எ.ம். நிரஞ்சன் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (14) வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கரைப்பற்றை சேர்ந்த 46 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்