உள்நாடு

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்கு வந்தபோது புகுடு கண்ணாவின் சகோதரர் கைது

“புகுடு கண்ணா” என்றும் அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி பாலச்சந்திரன் புஷ்பராஜின் சகோதரர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (13) அதிகாலை இந்தியாவில் இருந்து போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்கு வந்தபோது விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

36 வயதான பாலச்சந்திரன் கஜேந்திரன் என்ற சந்தேக நபர் கொழும்பு 10, ஜம்பட்டா தெருவைச் சேர்ந்தவர் என்று பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

மேல் மாகாணத்தில் 188 பேர் கைது

ட்ரோன் இயந்திரத்திரத்திற்கான தடை நீக்கம்

ஜனாதிபதி மாளிகையில் இருந்து 40 பழங்கால கொடிகளை காணவில்லை