உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவர் எரித்துக் கொலை – மகன், மகள், மருமகள் கைது

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டதாக தம்பகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் மண்வெட்டியால் அடித்து பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் 35 வயது மகன், 30 வயது மகள் மற்றும் 34 வயது மருமகள் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது த.தே.கூ

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு – அரசாங்கம் விழுந்துவிடும் என்கிறார்கள் – ஜனாதிபதி அநுர

editor

மத்தள வரும் விமானங்களுக்கு சலுகை