அரசியல்உள்நாடு

அதிரடியாக கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தனகல்ல பகுதியில் அவருக்குச் சொந்தமான காணியில் ஒரு T-56 துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், 130 தோட்டாக்கள் மற்றும் 12-போர துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சில டி-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்துள்ளதாக அவர் வழங்கிய தகவலுக்கு அமைய விசாரணை நடத்தவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கு வடக்கு குற்றப்பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஓலுகல தலைமையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Related posts

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு விடுதலை

நாட்டில் மருத்துவ துறையில் பாரிய நெருக்கடி!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் 124 பேர் கைது!-03 லட்சத்துக்கும் மேல் அபராதம்