உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய கார் – மூவர் படுகாயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியின் பொரலந்த பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து இன்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.

கந்தபளையிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த போது பலத்த மழையுடன் கூடிய வானிலை காரணமாக கார் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலிருந்து தேயிலை தோட்டத்தில் சுமார் 50 மீட்டர் அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, காரில் பயணித்த 03 பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தினால் கார் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

JustNow: கேஸின் விலை குறைப்பு – விலை விபரம்

டெக்னிகல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்