அரசியல்உள்நாடு

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான புதிய விசாரணை தொடங்கும் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையை தொடங்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களிடம் பேசிய வட்டகல, விக்ரமசிங்கேவின் சமீபத்திய அல் ஜசீரா நேர்காணலில் குறிப்பிடப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த இரண்டு சம்பவங்களும் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் நடந்தவை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளதாகவும், ரணில் முன்னதாக அரசியல் பாதுகாப்பால் ஸ்தம்பதிக்கச் செய்த அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் வட்டகல வலியுறுத்தினார்.

Related posts

நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் அனைத்தும் இரத்து

மஹிந்த,திலங்க இராஜினாமா!

IMF அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு