அரசியல்உள்நாடு

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

எபது நாட்டுப் பெண்கள் சமூக மட்டத்தில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடும் சூழலில், குறிகாட்டிகளைப் பார்க்கும் போது, ​​எமது நாட்டுப் பெண்கள் ஊழியர் படையணியில் குறைந்த பங்கேற்பையே ஆற்றி வருகின்றனர். இது 34% ஆக அமைந்து காணப்படுகின்றன.

வளர்முக நாடுகளில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு 46% க்கும் அதிகமாக காணப்படுகின்றன. வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன் என்பதை ஆராய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் பெரும்பான்மை பெண்களாக இருந்தாலும், ஆண்களை மையமாகக் கொண்ட குடும்ப ஒழுங்குகளும், கட்டமைப்புகளுமே இன்று நாட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

ஆண்களை மையமாகக் கொண்ட குடும்ப கட்டமைப்பில், பெண்களின் பக்கம் பல சமயங்களில் சுயமாக வெளிவருதற்கான வாய்ப்பு குறைந்த மட்டத்திலயே காணப்படுகின்றன.

பல சமயங்களில், எமது நாட்டில் பெண்கள் அசாதாரண சூழ்நிலைகளின் போதும், வீடுகளிலும், பணியிடங்களிலும் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் இத்தருணத்தில், இதுபோன்ற ஒரு நாளில், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், பாராபட்சங்களையும் அடையாளம் கண்டு, கால அட்டவணையுடன் இந்த அநீதிகளை முற்றாக ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.

சிவில் சமூகமும் அரசாங்கமும் இதன்பால் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமான லக்வனிதா அபிமானி விருது வழங்கும் நிகழ்வில் இன்று (08) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் சுத்தப்படுத்தும் பணி முன்னெடுப்பு

editor

அடுத்த வருடம் 06 மணிநேர மின் வெட்டை சந்திக்க நேரிடும்!

தடை தாண்டல் சம்பியனான மதுஷானி தற்கொலை