உள்நாடுவீடியோ

பேருந்தில் இருந்து மாணவர்களை பலவந்தமாக இறக்கிய நடத்துனரின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் | வீடியோ

பயணிகளுக்கான பருவகால சீட்டை வைத்திருந்தும், பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இருந்து இறக்கிய ஹட்டன் டிப்போவில் பணியாற்றும் நடத்துனரின் பணியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த நடத்துனர் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, விசாரணை முடியும் வரை அவரது பணியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் SLTB பருவகால சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் நீண்ட காலமாக பேருந்துகளில் ஏற அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால், SLTB பருவகால சீட்டை வைத்திருப்பவர்களைத் தவிர்க்கும் SLTB சாரதிகள் தொடர்பான தகவல்களை 1958 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு போக்குவரத்து அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

வீடியோ

Related posts

மேலும் 138 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு

அதிக போதைப்பொருள் பாவனை – உயிரிழந்த இளைஞன்

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் இடையே சந்திப்பு!