உள்நாடுபிராந்தியம்

வயலில் வீழ்ந்த யானை உயிருடன் மீட்பு – சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்குளம் வயல் பகுதியில் யானையொன்று உயிருடன் வீழ்ந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (06) காலை அப்பகுதி மக்களால் இது அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்க்பபட்டு தற்போது திணைக்கள அதிகாரிகள் அந்த யானைக்கு சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யானை இவ்வாறு வீழ்ந்து கிடப்பதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

-அப்துல் சலாம் யாசீம்

Related posts

உயர்தரப் பரீட்சை வகுப்புக்கள் தொடர்பிலான அறிவிப்பு

பொருளாதார மையங்கள் மூன்று இன்று திறப்பு

இன்றும் பல பிரதேசங்களில் பலத்த மழை

editor