உள்நாடுபிராந்தியம்

டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி கோர விபத்து – 29 வயதுடைய யுவதி பலி

இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

கவனக்குறைவாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பண்டாரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பிரதமர் இந்தியா விஜயம்

லண்டனில் இலங்கையர் ஒருவர் பலி

டெல்டாவை விட வீரியம் மிக்க கொவிட் வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில்