அரசியல்உள்நாடு

குற்றச்சாட்டுகள் தவறானவை – பதில் வழங்கிய முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணச் சூத்திரத்தின்படி, அப்போதைய அரசாங்கங்களின் அமைச்சரவை அமைச்சர்கள், நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதிலளித்துள்ளார்.

தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை வௌியிட்டு முன்னாள் அமைச்சர் இதற்கு பதிலளித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய சில தனிநபர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்டணச் சூத்திரத்தை முந்தைய அரசாங்கம் செயல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் 2022 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்திடமிருந்தும், 2023 ஆம் ஆண்டில் மேல்முறையீட்டு நீதிமன்றத்திடமிருந்தும் உத்தரவுகளைப் பெற்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், உயர் நீதிமன்றம் 2024 ஓகஸ்ட் 30 அன்று அந்த உத்தரவை இரத்து செய்து ஒரு உத்தரவைப் பிறப்பித்தது, மேலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த உத்தரவை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகளைக் கோரி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியதாக முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர வௌியிட்ட ‘X’ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பத்து கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொரோனா : பலி எண்ணிக்கை 204 ஆக அதிகரிப்பு

தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் – விசேட சுற்றறிக்கை.