உள்நாடுகாலநிலை

இன்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (02) பிற்பகல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இரவு வரை செல்லுபடியாகும்.

அதன்படி, இந்த அறிவிப்பு மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் பொருந்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கு மாலை அல்லது இரவில் பலத்த மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

மாலைதீவு உயர்ஸ்தானிகரை சந்தித்த பிரதமர் ஹரிணி

editor

 03 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!