உள்நாடு

இலங்கையில் பிறை தென்படவில்லை – புனித ரமழான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்

புனித ரமழான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (28) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்கள பிரதிநிதி மற்றும் உலமாக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நாட்டின் எப்பிரதேசங்களிலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை.

எனவே ஷஹ்பான் மாதத்தை 30ஆக பூரணப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை புனித நோன்பு ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Related posts

குற்றச் செயல்களில் ஈடுபடும் 15 பாதாள உலகக் குழுக்கள் தொடர்பில் தகவல்!

editor

பலஸ்தீனத் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரவுக்குமிடையில் சந்திப்பு

editor

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!