உள்நாடுபிராந்தியம்

வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண் – கசிப்புடன் கைது

வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணிடம் இருந்து சட்டவிரோத கசிப்பு தொகை சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று (27) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் இடிப்படையில் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 12,000 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 57 வயதுடைய பெண் சந்தேக நபரையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மேலும் கைதான வீரமுனை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மேற்படி சோதனை நடவடிக்கையானது, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸாரினால் மேற்கொண்டிருந்தனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதியினால் விசேட அழைப்பு

முழு ஊரடங்கு குறித்த செய்தி தொடர்பில் CID விசாரணை

தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது முக்கியம்