தற்போதைய அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர், ஜப்பானில் இருந்து நாட்டிற்கு புதிய வாகனங்களை உள்ளடக்கிய இரண்டாவது கப்பல் இன்று (27) பிற்பகல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
JUPITER LEADER என்ற மேற்படி கப்பல், 196 வாகனங்களை ஏற்றிக்கொண்டு ஜப்பானில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்று அங்கிருந்து தற்போது நாட்டை வந்தடைந்தது.