அரசியல்உள்நாடு

தேர்தல் சட்டங்களும் மாற்றப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றப்படாவிட்டால், வாக்காளருக்கு அவற்றைக் கேள்வி கேட்க உரிமை உண்டு என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக தேர்தல் சட்டங்களும் ஏதேனும் ஒரு வகையில் மாற்றப்பட வேண்டும் என இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நாட்டின் தேர்தல் முறையில் வாக்குகளை திரும்பப் பெறுவதற்கான எந்த முறையும் இல்லை என்றும், அவை சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த சமன் ஸ்ரீ ரத்நாயக்க,

“நம் நாட்டில் ஒரு பாரம்பரியம் என்னவென்றால், ஒரு தேர்தலுக்குப் பிறகு, ஒரு தரப்பினர் நியமிக்கப்படுகின்றனர், பின்னர் சில வருடங்களுக்கு அவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்.

பின்னர் அடுத்த தேர்தலில் அவர்கள் அதே மக்களிடம் திரும்பிச் செல்கிறார்கள். இப்படி தான் நடக்கின்றது.”

நியமிக்கப்பட்டவுடன், எங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம். அப்படி இல்லை.

குடிமக்களாக, எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எமக்கான கடமைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்யும் முழுமையான பொறுப்பு நமக்கு உள்ளது.

அதைச் செய்யாவிட்டால், அதைப் பற்றி நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.

நம் நாட்டில், மறு கேள்வி கேட்பு என்பது மற்றொரு தேர்தல் வரை மட்டுமே செய்யப்படுகிறது.

தேர்தல் சட்டங்களும் ஏதோ ஒரு வகையில் மாற வேண்டும்.

நமது நாட்டின் தேர்தல் முறையில் திரும்ப அழைக்கும் வழிமுறை எதுவும் இல்லை.

அவை சீர்திருத்தப்பட வேண்டிய விடயங்கள். இவை புதிய தேர்தல் சட்டத் திருத்தங்களில் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் ஆகும்.

நம் நாட்டில் வாக்காளர்களை விட நுகர்வோர் அதிகம்.

கொடுத்தால் கிடைக்கும் என்ற கோட்பாட்டை நாங்கள் நம்புகிறோம்.

“கொடுத்தால் மட்டும் போதாது, கொடுத்த பிறகு அதை இழுத்துச் செல்வது குடிமக்களின் பொறுப்பாகும்.” என்றார்.

Related posts

மேலும் 878 பேர் கைது !

ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது – மஹிந்த தேசப்பிரிய