அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கு உதவியதாக அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகநெகும திட்டத்தின் முன்னாள் அதிகாரிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி நேற்று (25) உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 2012 மற்றும் 2015 க்கு இடையில் அரசாங்க நிதியை குற்றவியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதற்கு உதவி, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாக நிதி குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைகள் 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பொது சொத்துச் சட்டத்தின் பிரிவு 386 (5) 1 இன் கீழ் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணை அதிகாரி நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் அச்சனி உமயங்கனா மற்றும் மஹேஷிகா கொஸ்வத்த ஆகியோர் ஆஜராகி, சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரினர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த தலைமை நீதிபதி, விசாரணை தொடர்பான முக்கிய பமுறைப்பாட்டு கோப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அந்தக் கோப்பையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்படுவதால், அவர்களை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அன்றைய தினம் அனைத்து உண்மைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.