உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் வாளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

வாள் ஒன்றினை உடைமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று (23) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இரவு வேளையில் சம்மாந்துறை பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 39 வயதுடைய சந்தேக நபர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இரண்டரை அடி நீளமான வாள் ஒன்றும் சந்தேக நபர் வசமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

கொரோனா ஜனாஸாக்களுக்கு ஓட்டமாவடி பச்சைக்கொடி [VIDEO]

மன்னார் மனிதப் படுகொலைகள் – பொலிஸாரால் தேடப்படும் இருவர்!

editor

டொலர் ஒன்றுக்கான ஊக்குவிப்புத் தொகை அதிகரிப்பு