அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று அரசியலை செய்து வருகிறது – யஹ்யாகான்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ ஏமாற்று அரசியலை செய்து வருகிறது என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை சாய்ந்தமருது பிரதேசத்தில் திறந்து வைத்ததன் பின்னர் இன்று (23) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 15 வருடங்களாக இணைந்து பயணித்துள்ளேன். மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் இந்த கட்சியை எமது சமூகத்தின் இருப்புக்காகவும் பிரதேச அபிவிருத்திக்காகவும் உருவாக்கினார்.

ஆனால் இப்போதுள்ளவர்கள் தமது கஜானாக்களை நிரப்புவதற்காக இதனை பாவித்து வருகின்றனர். 

நான் இக்கட்சியினால் பல்வேறு வெட்டுத் குத்துக்களையும் ஏமாற்றங்களையும் நேரடியாக சந்தித்தவனாக உள்ளேன்.

எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ ஏமாற்று அரசியலை செய்து வருகிறது என்றும்  தெரிவித்தார்.

-பாறுக் ஷிஹான்

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

உடல் தாயாரிடம்; கணவன் தற்கொலை முயற்சி

கடும் மழை, பலத்த காற்று குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

editor