அரசியல்உள்நாடு

கடுமையான அரசியல் பழிவாங்கல் இடம்பெறுகிறது – சஜித் பிரேமதாச

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, ​​இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள் மற்றும் பதில்களை பகுப்பாய்வு செய்யும் போது, ​​அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்.

வளமான நாடு அழகான வாழ்க்கை, நாடு அநுரவோடு என முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் இதில் அமைந்துள்ளனவா என பார்க்கும் போது இந்த வரவுசெலவுத் திட்டம் வாக்குறுதியளித்தபடி கிடைத்த மக்கள் ஆணைக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றும் போதே போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேர்தல் கொள்கை பிரகடனத்தின் பக்கம் 105 இன் படி, மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை கொண்டு வருவோம் என்று கூறப்பட்டாலும், அந்த வாக்குறுதியை கைவிட்டு, இன்று மக்கள் மீது பெரும் அசௌகரியத்தையும் அழுத்த்தையும் சுமத்தி, மக்களுக்கு நலன்புரி ஒதுக்கீடுகளை வரையறுக்கின்ற 2024 நிதி முகாமைத்துவச் சட்டத்தின் பிரகாரம் அடிப்படைச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% மட்டுமே, முதன்மை இருப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% மட்டுமே என்றும், உலகில் 10 நாடுகளில் மட்டுமே இத்தகைய வரம்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவை அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல என்றும், தேர்தல்கள் மூலம் கிடைத்த மக்கள் ஆணைக்கு துரோகம் இழைத்துள்ளனர்.

கூறிய விடயங்கள் அனைத்தையும் மறந்து விட்டு இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

IMF இணக்கப்பாடும், சர்வதேச பிணைமுறி பத்திரதாரர்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள இணைக்கப்பாடுகள் மிகவும் பாதகமான ஒப்பந்தங்களாகும். IMF வேலைத்திட்டத்தில் இருந்து பின்வாங்காது, மக்கள் சார், மக்களின் பக்கத்திலிருந்து சிந்தித்து மனிதாபிமான புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் இந்த வரம்புகள் காரணமாக, புறநிலைகள் தொடர்பான திருத்தங்களைச் செய்ய முடியாது சமூக இடைவெளி ஏற்பட்டுள்ளது.

பொதுப் பண்டங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தாலும், இந்தக் கட்டுப்பாடுகளினால் அதுவும் தடைப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய கட்டுப்பாடுகள் ஒரு நாட்டின் வளர்ச்சியில் பாரபட்சமான எதிர்மறை விளைவை ஏற்படுத்தும், அரசாங்கம் இதையெல்லாம் மறந்து விட்டு செயல்படுவது வெளிப்படை. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்காப்பாட்டை திருத்துவோம் என தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளித்தாலும், அவற்றை மறந்து பெற்ற மக்கள் ஆணையைப் முழுமையாகக் காட்டிக் கொடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இது மக்கள் ஆணைக்கு இழைக்கும் துரோகமாகும்.

சம்பளம் அதிகரித்ததா அல்லது கொடுப்பனவுகளுக்கு என்ன ஆனது என்ற குழப்பம் உருவாகியுள்ளது. சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை நான் சந்தித்தபோது கூட, இதில் திருத்தங்களை கொண்டு வருவோம் என கூறினேன். சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை.

என்றாலும் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மேடையில் கூறிய அனைத்து விடயங்களையும் மறந்துவிட்டு, ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அவ்வாறே ஏற்று மக்கள் ஆணைக்கு துரோகம் இழைத்து, மக்களை ஏமாற்றியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இணக்கப்பாட்டையையே தொடர்ந்தும் முன்னெடுப்பது ஏன்?

நாட்டுக்கு சாதகமான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு காணப்பட்டும் அதை கருத்திற் கொள்ளாது, மக்களுக்கு கூடிய பாதங்களை ஏற்படுத்தும் இணக்கப்பாட்டையே தொடர்ந்து கொண்டு செல்கின்றனர்.

இவற்றுக்கு ஏதாவது தீர்வைக் வழங்க முடிந்தும் அது இங்கு நடக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நிராகரித்து மனிதாபிமான வேலைத்திட்டத்திற்கு சென்றிருக்கலாம்.

அதை தவறவிட்டுள்ளீர்கள். 2028 இல் கடனை அடைக்க, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும், அரச வருவாயை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறே போனால் பொருளாதாரம் அவ்வளவுதான்!

1975 முதல், IMF வுடன் 75 நாடுகள் இணக்கப்பாடுகளை செய்துள்ளன. இவற்றில், 59% இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இணக்கப்பாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இது நாட்டு மக்களுக்குச் சொல்லப்படாத ஓர் விடயம். 41% நாடுகள் மட்டுமே ஒரு தடவை மாத்திரம் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலை எமது நாட்டுக்கும் ஏற்பட்டால் நாட்டின் பொருளாதாரம் அதோ கதிதான். ஆனால் இன்றைய நிலவரப்படி நமது நாடு கடனை நிலைபேறு தன்மையில் இருந்தும் விலகிச் சென்றுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இப்போதாவது சரியான இணக்கப்பாட்டுக்கு செல்லுங்கள்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பொதுத் தேர்தலுக்கு முன்னரான 2 மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய இணக்கப்பாடொன்றை நடத்தியிருக்க வேண்டும்.

இது தவறவிடப்பட்டுள்ளது. இப்போது ஒரு புதிய இணக்கப்பாட்டுக்குச் செல்ல வேண்டும். இந்த பொருளாதார வளர்ச்சி இலக்குகள் யதார்த்தமானவை அல்ல, எனவே தயவு செய்து இதில் கவனம் செலுத்துங்கள், நாடு ஒரு கடினமான இடத்திற்கு செல்கிறது.

இதனால் நாட்டு மக்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆசிரியர்கள், அதிபர்கள், குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் என முழு அரசாங்க சேவைத்துறையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் வாக்குறுதியளித்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதுபோயுள்ளது.

முதன்மை இருப்புத் தொகையின் வரம்பு காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக நாடு அனுரவோடு கொள்கையை கூட முன்னெடுக்க முடியாது போயுள்ளது.

அரசாங்கமே IMF இன் கைதியாகிவிட்ட நிலையில், சிரேஷ்ட பிரஜைகள் சமூகம் பெறும் 15% வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், இலட்சக்கணக்கான சிரேஷ்ட பிரஜைகள் சமூகத்துக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளன. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்குணவு வழங்கப்பட்டாலும், தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பு 33% ஆக காணப்படுகின்றன. இது குறைந்தபட்சம் 45% ஆக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் முன்னெடுத்த கொள்கையுமே உங்களிடமும் காணப்படுகிறது.

தற்போதைய அரசாங்கத்தில் முறைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் முன்னெடுத்த கொள்கையே இங்கும் காணப்படுகிறது. அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவை கோட்டா மஹிந்த ஆகியோர் முன்னெடுத்த நடைமுறைகளாகும். மேலும், கடுமையான அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருகின்றன.

மாகாண செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்களைக்கூட நீக்கும் நிலைக்கு அரசாங்கம் சென்றுள்ளது. இந்த பழிவாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நல்ல விடங்களுக்கு நாம் எமது ஆதரவைத் தருவோம்.

இந்த வரவுசெலவுத்திட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். மக்கள் நலன்சார்ந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்போம். பன்முகப்படுத்ழப்பட்ட நிதி ஒதுக்கீட்டை கொடுக்கும்போது, ​​முறையாக வழங்குமாறும் அவர் தெரிவித்தார்.

வெளிவள பயன்பாடு (External Environment) தொடர்பில் இந்த வரவு செலவுத்திட்டம் கவனம் செலுத்தவில்லை.

உலகத்தில் நடக்கும் ஏனைய விடயங்களைப் குறித்த போதிய புரிதல் இந்த அரசுக்கு இல்லை. ஏற்றுமதி சந்தை பன்முகப்படுத்தப்பட வேண்டும். ஆபிரிக்க பிராந்தியம், ஆசியான் மற்றும் தென் ஆபிரிக்க பிராந்தியங்களுக்கான ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளை நாம் இணங்கான வேண்டும்.

Related posts

பாரத பிரதமர், ஜனாதிபதி கோட்டாபயவிற்கு பாராட்டு

முன்னாள் எம்.பி ஹரீஸ் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்

editor

 மேலும் சில பொருட்களுக்கு விலை அதிகரிப்பு