உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

முஸ்லிம் பெயர் தாங்கிய கொலையாளியின் உண்மையான பெயர் சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு | வீடியோ

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

சந்தேக நபர் பயணித்த வேன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பெண் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

வீடியோ

Related posts

அரிசி மாபியாக்களுக்கு இடமளிக்கவேண்டாம் வேண்டாம் – ஹர்ஷ டி சில்வா

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

editor

டயானா’வுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை