உள்நாடுபிராந்தியம்

கடலில் நீராடச் சென்ற 16 வயது சிறுவனை காணவில்லை

கல்கிஸை கடலில் நீராடச்சென்ற சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக கல்கிஸை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

16 வயது கங்கொடவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு, குறித்த சிறுவன் நண்பர்களுடன் இவ்வாறு கடலுக்கு நீராடச் சென்றிருந்த வேளையிலேயே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு மற்றும் கல்கிஸை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை ​பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

 ஊடகவியலாளர் ரயில் விபத்தில் உயிரிழப்பு

கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

மற்றுமொரு மக்கள் போராட்டம் வெடித்தது; இம்முறை கண்டியில் ,