அரசியல்உள்நாடு

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றிற்கு இன்று (14) அறிவித்தார்.

பிரதமரின் வேண்டுதலுக்கிணங்க சபாநாயகரினால் நிலையியற் கட்டளை இல. 16 இன் பிரகாரம் 2025 பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதற்கு அமைவாக இன்று பாராளுமன்றம் கூட்டப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகள் சுமார் 30 நிமிடங்கள் வரையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த ஐவர் கைது

தலதா பெரஹராவை பார்வையிட வந்த குழந்தையை கடத்திய சந்தேகநபர் கைது

‘மக்களுக்காக நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே உள்ளனர்’