கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த அவர் இன்று (11) காலை கட்டுநாயக்கவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.