உள்நாடு

படிப்படியாகக் குறைந்து வரும் டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று(10) வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, (10) அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 293.18 ஆகவும், விற்பனை விலை ரூ. 301.74 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இன்று (10) டொலரின் சராசரி மதிப்பு ரூ. 297.65 ஆக பதிவானது.

கடந்த 5 ஆம் திகதி இதன் மதிப்பு ரூ. 299.14 ஆக உயர்ந்திருந்த நிலையில், தற்போது டொலரின் பெறுமதி படிப்படியாகக் குறைந்து வருகிறது.

அத்துடன் அவுஸ்திரேலிய டொலரின் மதிப்பும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இன்று அதன் கொள்முதல் விலை ரூ. 181.70 ஆகவும், விற்பனை விலை ரூ. 190.95 ஆகவும் பதிவானது.

Related posts

தீப்பரவல் – வௌ்ளவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்

பொதுத் தேர்தல் தொடர்பிலான விசேட தீர்மானம் இன்று

தீவிரமான முடிவுகளை எடுக்காவிட்டால் ஸ்தம்பித்து நிற்க வேண்டியிருக்கும்