உள்நாடுபிராந்தியம்

தெற்கு நெடுஞ்சாலையில் தீப்பிடித்த கார்

சட்டத்தரணி தனது மனைவி மற்றும் தாயாருடன் காலி பகுதியில் ஒரு அன்னதான சமய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அத்துருகிரிய நுழைவாயில் ஊடாக அதிவேக நெடுஞ்சாலையில் காலி நோக்கி தனது காரை செலுத்திச் சென்று கொண்டிருந்தபோது, ​​தொடங்கொட வெளியேறும் பகுதிக்கு அருகில் காரில் அபாய எச்சரிக்கை விளக்கு எரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாகச் செயற்பட்ட சட்டத்தரணி, தொடங்கொட நுழைவாயிலுக்கு வெளியே காரை நிறுத்தி, அவரும் அவரது மனைவியும் தாயாரும் அதிலிருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே, காரின் முன்பக்கம் தீப்பிடித்து பின்னர் அதன் உட்பகுதிகளும் முற்றிலும் எரிந்து நாசமானதாக விசாரணைகளிலிருந்து தெரிவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சட்டத்தரணி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியதால் எந்தவித உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பண்டாரகம களனிகம தீயணைப்புப் பிரிவினர் குறித்த இடத்திற்கு வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

சமையல் எரிவாயு விலை தொடர்பிலான தீர்மானம்

சாமர சம்பத்துக்கு ஒரு தொகை குற்றப்பத்திரிக்கை உள்ளது – அமைச்சர் கே.வி.சமந்த வித்தியாரத்ன.

editor