உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதி முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி – மூவர் படுகாயம்

பொலன்னறுவை, தீப உயன பூங்காவிற்கு அருகில் இன்று சனிக்கிழமை (08) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் பின்புறத்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா அச்சுறுத்தல் : சில இடங்களில் ஊரடங்கு தளர்வு

எனது அபிவிருத்தி பணிகளை தடை இன்றி முன்னெடுப்பேன்

“வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித்தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி”- ரிஷாட்