அரசியல்உள்நாடு

குடிநீரில் இரசாயணம் கலந்துள்ளதா ? பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன்

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, நான் கேட்ட கேள்விக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. நான் கேட்டது உங்கள் வசம் எவ்வளவு பைப்லைன் காணப்படுகிறது.

எத்தனை கிலோமீற்றருக்கு உடனடியாக குழாய்களை பொருத்த முடியும் என்றே நான் கேள்வி எழுப்பியிருந்தேன் என பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

எனது இரண்டாவது கேள்வி தேசிய மட்டத்தில் முக்கியமான கேள்வி. நேற்று பாராளுமன்ற உறுப்பினர் டீ.வி.சானக அவர்கள் இப்பிரச்சினையை சபையில் எழுப்பியிருந்தார்.

மேலதிகமாக அவர் சமர்ப்பித்திருந்த ஆவணங்களையும் பெற்றுக் கொண்டேன்.

இந்த நீரை குடிநீராக பயன்படுத்த லைம்வோட்டர் அல்லது குழாய்நீருக்கு போடப்படும் இரசயானம். நான் அதனை இன்று காலை கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களிடமும் கேட்டிருந்தேன்.

ஹைட்ரேடட் லைம் எனும் இரசாயனப் பொருனை இறக்குமதி செய்து அது குடிநீரை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனப் பதார்த்தம் என முன்னாள் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்கள் உறுதி செய்தார்.

கௌரவ டீ.வி.சானக அவர்கள் பொய் சொல்கிறாரோ தெரியவில்லையே எனவே முன்னாள் அமைச்சரிமும் விசாரித்தேன். அதன்போது அவரும் இவ்வாறானதொரு பதார்த்தம் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

நேற்று இந்த செய்தி வெளியானதில் இருக்கும் நீரை பருக முடியுமா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

கௌரவ டீ.வி.சானக அவர்கள் பொய் கூறுகிறாரோ என்று அறியாதால் நான் அவரிடமிருந்து இந்த ஆவணங்களை தற்போது பெற்றுக் கொண்டேன். அதில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2-3 மாதிரி தரவுகள் பெறப்பட்டுள்ளன. அந்த மாதிரிகளில் குரோமியம் அளவு 14ஆக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அது 10இற்கும் குறைவாக காணப்பட வேண்டும். இது கடந்த டிசம்பர் 10ஆம் எடுக்கப்பட்ட அறிக்கை. தற்போது பெப்ரவரி 7ஆம் திகதி.

இதுவரை கொண்டுவரப்பட்ட இரசாயனப் பதார்த்தம் இன்னும் களஞ்சியப்படுத்தப்பட்டு உள்ளதா? அல்லது இந்த இரசாயனப் பொருள் இலங்கை முழுவதும் பகிர்ந்தளிக்கப்பட்டு இதுவரை இந்த இரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் நாட்டில் குடிநீர் பருகக் கூடிய தரத்தில் காணப்படுகிறதா? அல்லது இந்த அறிக்கைகள் பிழையானவையா? ஏனென்றால் நீர்வழங்கல் சபையில் இது போன்ற விடயங்களை பரிசோதிப்பதற்கு பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்த கூட்டு ஆராய்ச்சி மையமொன்று கண்டியில் இருப்பதாக கௌரவ அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

அவ்வாறாயின் அதற்கு வழங்கப்படாது இது குறித்து ஏன் தனிப்பட்ட ரீதியில் ஆராயப்பட்டுள்ளது? இதில் ஏதேனும் பிரச்சினை காணப்படுகிறதா?

இன்று குடிநீர் தொடர்பில் மக்கள் பிரச்சினை எழுப்ப வேண்டியது அவசியமானதா? அல்லது தேவையற்றதா? அவ்வாறு தேவையற்றது எனில், உங்களது இந்த ஆய்வறிக்கைக்கு அமைய இதோ இருக்கிறது இலங்கை தரநிலை நிறுவனத்தின் இரசாயனவியல் ஆய்வக அறிக்கை.

அவ்வாறாயின் இலங்கையில் அரச நிறுவனமான இந்த தரநிலை நிறுவனத்தின் அறிக்கை தவறானதா? அல்லது நீங்கள் தவறானவர்களா? எனது இந்த கேள்விக்கு பதில் அளியுங்கள். நாட்டு மக்களுக்கு குடிநீரை அச்சமின்றி பருக முடியுமா? முடியாதா? நன்றி.

கௌரவ சபாநாயகர் அவர்களே, நான் முன்னைய கேள்வியின் போது கிலோமீற்றர்களுடன் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு சரியாக செவிமடுத்திருந்தால். அதனை அறிந்திருக்கக் கூடும்.

உங்களது இரண்டாவது கேள்வி தொடர்பில் நான் இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடுகிறேன். அதனூடாக இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்.

கிலோமீற்றர்களுடன் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு சரியாக செவிமடுத்திருந்தால் அதனை நான் அறிந்திருக்கக் கூடும் என்று கௌரவ அமைச்சர் குறிப்பிட்டார். நான் செவிமடுத்துக் கொண்டு தான் இருந்தேன்.

தற்போது எத்தனை கிலோமீற்றர் தூரத்திற்கு பொருத்துவதற்கு கைவசம் பைப்லைன் (குழாய்) இருக்கிறது என்றே நான் கேள்வி எழுப்பி இருந்தேன். அவ்வாறு பைப்லைன் (குழாய்) அளவு தெரியாது எனில் தெரியாது என்று கூறுங்கள்.

அதைவிடுத்து தயவுசெய்து நான் செவிமடுக்கவில்லை என்று கூறவேண்டாம்.

Related posts

குறைந்தபட்ச பேரூந்து கட்டணமாக ரூ.40

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டாலர்

சுயாதீன சங்கம் மத்திய வங்கிக்கு முன்னால் ஆர்பாட்டம்