உள்நாடு

CID போல் நடித்து பண மோசடி – கைதான நபருக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வு பிரிவின் உப பரிசோதகராகக் காட்டிக்கொண்டு பண மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவில் பணிபுரியும் ஒரு பொலிஸ் பரிசோதகர் என போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு பல்வேறு நபர்களை மிரட்டி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாடுகள் பல கிடைத்திருந்தன.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேக நபரை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் – ஜனாதிபதி இடையே சந்திப்பு

நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை

முறையற்ற அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு என்னை வற்புறுத்தினர் – போட்டுடைத்த சபாநாயகர்