உள்நாடு

77ஆவது சுதந்திர தினத்தில் தமிழிலும் ஒலித்த தேசிய கீதம் – புதிய அரசின் செயலுக்கு பலரும் பாராட்டு

நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை பலரதும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் நேற்று (04) நாட்டின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வு தேசிய கீதத்தோடு ஆரம்பமானதுடன் சிங்கள மொழியில் அந்த தேசிய கீதம் பாடப்பட்டது.

அதனையடுத்து, சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் சில தடவைகள், ஒரே சந்தர்ப்பத்தில் முதலில் சிங்களத்திலும் பின்னர் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டன.

எனினும், இம்முறை வழமைக்கு மாறாக ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை பலரதும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இம்முறை சுதந்திர தின விழாவில் கொழும்பு 2 பாதுகாப்பு சேவை கல்லூரி, கொழும்பு 10 நாலந்தா கல்லூரி, கொழும்பு 4 முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு 7 றோயல் கல்லூரி, கொழும்பு 4 இராமநாதன் இந்துக் கல்லூரி, கொழும்பு 10 ஷாகிராக் கல்லூரி, கொழும்பு 10 அனைத்து புனிதர்கள் மகளிர் மகாவித்தியாலயம், கொழும்பு 8 சுசமய வித்தியாலயம், கொழும்பு 4 இந்துக் கல்லூரி ஆகியவற்றின் மாணவ, மாணவிகள் 44 பேர் இணைந்து தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதம் இசைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து மதுபான சாலைகளுக்கும் 2 நாட்களுக்கு பூட்டு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான HIV பரிசோதனை நிறுத்தம்

கர்ப்பணி மற்றும் தாய் பாலூட்டும் பெண்களுக்கு அரசினால் சலுகை