மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக நிலவி வரும் சீரான கால் மீ காரணமாக மத்திய மலைந அனைத்து நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
அதன்படி மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர்மட்டம் கொள்ளளவை விட 13 அடி குறைந்து 107 அடி நீர் மட்டும் உள்ளது
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்து 149 நீர் சேமிப்பில் உள்ளது.
விமலா சுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்து 83 அடி மட்டுமே நீர் கையிருப்பில் உள்ளது.
கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 8 அடி குறைந்து 51 மட்டும் உள்ளது என நீர் மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் தற்போது சற்று வரட்சி காரணமாக நீர் தேக்கங்களின் கரையோர பகுதியில் பற்றைகளுக்கும் வன பகுதிகளுக்கும் விசமிகள் தீ வைக்கக்கூடும் அவ்வாறு தீ வைப்பவர்களை அடையாளம் கண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிப்பதுடன் வனத்துறை அதிகாரிகளுக்கும் உடன் அறிவிக்குமாறு அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கேட்டு கொள்கிறார்.
-மஸ்கெலியா நிருபர்.