உள்நாடு

ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள்

ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதன் எண்ணிக்கை 1,382 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 764 டெங்கு நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 315 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

உத்தியோகபூர்வ விஜயத்தில் அலி சப்ரியின் மகன் -ஏற்பட்டுள்ள சர்ச்சை.

நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பிரதிவாதிகள் விடுதலை

முஜீபுருக்கு புதிய கடமையை ஒப்படைத்த சபாநாயகர்!