வகைப்படுத்தப்படாத

களுத்துறையில் மண் சரிவு

(UDHAYAM, COLOMBO) –     மாத்தறை -தெனியாய – மொரவக்க கந்தையில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, இரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண் சரிவு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை –  புலத்சிங்கள – போகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவின் காரணமாக நபர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சப்புகஸ்கந்த – ஹெய்யந்துடுவ  பகுதியில் வீடொன்றில் மண்சரிவு இடம்பெற்றுள்ளது.

இதில் சிக்கி 2 பெண்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

40 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து சாரதி காயம்

ஹட்டன் சமனலகமவில் மண்சரிவு அபாயம் 12 குடும்பங்களை வெளியேர உத்தரவு ..பிரதேசவாசிகள் வெளியேர மறுப்பு

காலம் கடந்த சிகிச்சையே டெங்கு உயிரிழப்பு அதிகரிக்க காரணம்