உள்நாடு

ரவூப் ஹக்கீம் – என். எம். அமீன் இணைந்து வெளியிட்ட நூல்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ஆங்கிலத்திலும் சிங்கள மொழியில் வெளிவந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூலான உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் மறைகரம் வெளியிட்ட போது என்ற நுாலையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ) நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேறானவர்கள் (முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்) என்ற நூல் வெளியீட்டு வைபவம் கொழும்பு 7 ல் உள்ள ஸ்ரீலங்கா பவுண்டேஷன் பிரதான மாநாட்டு மண்டபத்தில் 30.01.2025 ல் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நூலின் பிரதிகள் – அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் நாயகம் அஷ்ஷேக் அர்க்கம் மௌலவி, பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலி, ஜனாதிபதி சட்டத்தரணியுமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எ. சுமந்திரன், எம்.எம். சுகைர், பேராசிரியர் எம்.எஸ் அனஸ், திருச்சி சிரேஸ்ட ஊடகவியலாளர் சாகுல் ஹமீட், வைத்திய பேராசிரியர் றிஸ்வி சரீப், சிங்கள மொழி சிரேஸ்ட ஊடகவியலாளர் மகிந்த ஹத்தக்க, ஆகியோருக்கு பிரதான மேடையில் வைத்து வழங்கப்பட்டது.

அத்துடன் நூல் பற்றிய உரைகள் பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ், எம்.எம் சுஹைர் எம்.ஏ சுமந்திரன் சிங்கள மொழி மூலம் மஹிந்த ஹத்தக்க ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள் அத்துடன் ஏற்புரை நூலசிரியர்கள் ரவூப் ஹக்கீம், என்.எம் அமீன் ஆகியோர்களும் நிகழ்த்தினார்கள்
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், நுவரெலியா பா.உறுப்பினர் திகாம்பரம், உதுமாலெப்பை, உட்பட முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகைகளின் ஆசிரியர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் ஆலயத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-அஷ்ரப் ஏ சமத்

Related posts

 Listeria எனும் மற்றுமொரு புதிய வைரஸ்

கடந்த 24 மணித்தியாலத்தில் 20 பேர் கைது

தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கும் பேரிழப்பு