அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜா மறைவுக்கு ஜீவன் தொண்டமான் அனுதாபம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எம்மை விட்டும், இவ்வுலகை விட்டும் மறைந்தார் என்ற செய்தி கேள்வியுற்றதும் மிகவும் துயரமடைந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இ.தொ.காவுடன் அமரர் மாவை சேனாதிராஜா நீண்ட காலமாக உறவை பேணி வந்தவர்.

அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர்களது காலந்தொட்டு தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகளையும், சலுகைகளையும் வென்றெடுப்பதற்காகவும், இ.தொ.காவின் தொழிற்சங்க போராட்டங்களில் தமது ஆதரவை தெரிவித்தது மட்டுமல்லாது, பாராளுமன்றத்திலும், வெளியிலும் குரல் கொடுத்தவர் என்பதை இவ்வேளையில் நினைவு கூறுகின்றோம்.

வடக்கிலும், கிழக்கிலும் எந்த போராட்டங்கள் தொடர்ந்தாலும் சாத்வீக வழிகளிலும், அகிம்சை முறைகளிலும் முன்னின்று போராடியவர்களில் மதிப்பிற்குரிய மாவை சேனாதிராஜா குறிப்பிடத்தக்க முன்னணி அகிம்சை போராளியாக திகழ்ந்தவர். இ.தொ.காவுடன் மிகவும் நெருக்கமானவர்.

நேசமுடையவர். நல்ல மரியாதை கொண்ட மாமனிதர். அவருடைய காலத்தில் சமூகத்துக்கும், மக்களுக்கும் அளப்பரிய சேவையை வழங்கி தமது இறுதி நாட்களை மக்களுக்காக அர்ப்பணித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருடனும், உற்றார் உறவினருடனும் இதொ.கா தமது துயரத்தை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாம் பிரார்த்திக்கின்றோம்.

இ.தொ.கா
ஊடகப்பிரிவு

Related posts

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நன்கொடை

குண்டு வெடிப்பில் பிணையில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு “Pekoe trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் – சாகல ரத்நாயக்க