அரசியல்உள்நாடு

ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், பிரதமர் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட் அவர்கள், 2025 ஜனவரி 27 அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமசூரிய அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், வறுமை ஒழிப்பு, பிராந்திய அபிவிருத்தி மற்றும் பொருளாதார சமநிலை ஆகியவை உள்ளடங்கலாக அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமை திட்டங்கள் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலிற்கான முயற்சிகள் மற்றும் “க்ளீன் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சி திட்டம் பற்றிய கருத்து பரிமாற்றமும் தேசிய முன்னேற்றத்திற்கான வழிநடத்தல்களின் போது சமூக பொறுப்புகள் மற்றும் அனைத்தும் உள்ளடங்களாக நிர்வாகம் செய்வதின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பிற்கு இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதன்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த மற்றும் வெளிநாட்டு அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் தமித்ரி சங்கிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

-பிரசாந்தன்

Related posts

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைப்பு!

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

சூரி­ய­ கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு