அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் நீக்கப்படும் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படுவதாகவும் அது தொடர்பான தகவல்களை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் அறிவிக்க முடியுமென்றும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் முன்வைத்த விடயங்களுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதன்போது நீதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் முக்கியமான விடயங்களை குறிப்பிட்டார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படுகின்றது.

அது தயாரிக்கப்பட்டதும் குழுவில் ஆராய்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்.

அது தொடர்பான விபரங்களை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் உறுதிப்படுத்துவோம். இதற்கமைய பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என்பதுடன் பயங்காரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்றார்.

Related posts

பல்கலைக்கழக பரீட்சைகள் குறித்து அறிவிப்பு

தொடர்ந்தும் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பரிசோதனை நிபுணர்கள் இன்மையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நெருக்கடி!