உள்நாடு

வெள்ளவத்தையில் பெண் கடத்தல்

பொலிஸ் உத்தியோகத்தருக்கு நிகரான சீருடை அணிந்திருந்த நபர் ஒருவரும் மற்றுமொரு நபரும் பெண் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பெண்ணைக் கடத்திச் சென்ற நபருக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தராகக் காணப்பட்ட நபர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் முன்னர் பொலிஸ் பிரிவில் கடமையாற்றி சேவையிலிருந்து விலகிய பணி இடைநிறுத்தப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த 18 ஆம் வெள்ளவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் தங்குமிடத்துக்கு முன்பாக கடத்தப்பட்டு 31,500 ரூபா பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு பெண்ணை வெலிக்கடை பிரசேத்தில் கைவிட்டுச் சென்றுள்ளனர்

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Related posts

13 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை!

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல்!

“அரசாங்கத்தால் ஜனநாயகத்திற்கு மரண அடி” – சஜித்