அரசியல்உள்நாடு

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டி

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கு என்று நேற்று (21) மாலை, “தாருஸலாம்” தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் , எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.நழீம் மற்றும் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற பிரஸ்தாப கொழும்பு மாவட்ட மத்திய குழு கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி நீண்ட நேரமாக கலந்துரையாடப்பட்டதன் பின்னர், கொழும்பு , தெஹிவலை-கல்கிஸ்ஸ, கோட்டே , மொரட்டுவை, கொலன்னாவ மாநகர சபைகளுக்கும், கொடிகாவத்தை- முல்லேரியா போன்ற பிரதேச சபைகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்ற முடிவை தலைவர் அறிவித்ததோடு அடுத்த கட்ட நடவடிக்கைகளை கட்சி உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவித்தார்.

-கே எ ஹமீட்

Related posts

ஊடக மாநாடு அமைச்சர் நிமல் சிறிபா டி சில்வா துறைமுக அபிவிருத்தி அமைச்சில்

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் – மனிதாபிமான ரீதியாக கூறுகிறேன் – ரணில் விக்ரமசிங்க

editor

மின்சார கட்டணத்தை செலுத்த புதிய வழிகள் அறிமுகம்!