முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவை பிஜணையில் விடுதலை செய்ய பண்டாரவளை நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (20) உத்தரவிட்டுள்ளது.
விஜித் விஜயமுனி சொய்சா 02 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை பயன்படுத்தி வாகனத்தை வடிவமைத்து, அதற்கு போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் போரில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.