அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டி – SLPP அதிரடி தீர்மானம்

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளோம்.

சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடும் தரப்பினரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானம் ஹோமாகம மற்றும் களனி கூட்டுறவு சங்கத் தேர்தல் ஊடாக திருத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பலவீனத்தை மக்கள் மூன்று மாதங்களுக்குள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களை மக்களுக்கு வழங்கியது.

அத்துடன் 75 ஆண்டுகால அரசியலையும் சாபம் என்று சபித்தது. மக்களுக்கு வழங்கிய போலியான வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக்கு எதிரானதாகவே திரும்பியுள்ளது.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளோம்.

ஜனாதிபதித் தேர்தலில் எம்மை விட்டுச் சென்றவர்கள் இன்று அரசியலில் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுபவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என்று கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

Related posts

இறுதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்

கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும்

வெளிநாட்டுத் திரைப்படங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்!