அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தேர்தல் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

கடந்த பொதுத் தேர்தலில் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 74 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 800க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தந்த பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கொவிட் இனால் இறந்தவர்களை எந்த கல்லறையிலும் அடக்கலாம்

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது