அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்தியாவின் உதவி மூலம் பெற எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சந்தர்ப்பங்களை தவற விடாது நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 93 பேர் வெளியேறினர்

ஆறு மாதங்களுக்குள் தீர்வு – சஜித்