உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று (11) காலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.

காலை 5.05 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.33 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.62 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Related posts

ரஷ்யாவின் மொஸ்கோ நகர முடக்கம் தளர்த்தப்பட்டது

பதவி தான் பெரிசு : பிரதமர் போரிஸ் காட்டம்

அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட 2 ஆவது நாடாக ஸ்பெய்ன்