உள்நாடுசூடான செய்திகள் 1

சிகரெட் மற்றும் மதுபானம் விலை அதிகரிப்பு

நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலை 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மனுபானங்களின் விலைகளை 6 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts

நகைச்சுவை நடிகர் ஓய்ந்தார்

அரச பஸ் சாரதிகளின் விடுமுறைகள் ரத்து

 ஸ்ரீ லங்கா முதலீட்டு வாரியத்திற்கு புதிய தலைவர் நியமனம்