அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – UNP – SJB யை இணைக்கும் பொறுப்பை ஏற்ற முன்னாள் அமைச்சர்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பல தரப்பினர் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே ராஜித சேனாரத்ன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் குறித்து அரசியல் மேடையில் பேச்சுக்கள் இடம்பெற்று வரும் நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, அரசியல் கட்சிகள் இந்த விடயம் தொடர்பாக விவாதங்களைத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கடந்த தேர்தல்களில் முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற பின்னடைவுகளைக் கருத்தில் கொண்டு, சில கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ‘யானை’ சின்னத்தில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், முந்தைய தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை விட ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலையில் இருந்ததால், மேலும் சில தரப்பினர், சஜித் பிரேமதாசவின் தலைமையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இந்நாட்டின் முன்னணி இந்திய வர்த்தகர்களுக்கு 5 வருட விசா

மலையக மக்களுக்காக தனி விவாதம் நடாத்த தயாராகும் இலங்கை பாராளுமன்றம்!