அரசியல்உள்நாடு

சிவப்பு அரிசிக்கு மட்டுமே தட்டுப்பாடு – அமைச்சர் வசந்த சமரசிங்க

சந்தையில் அரிசி தட்டுப்பாடு கிடையாது. சிவப்பு அரிசிக்கு மட்டுமே தட்டுப்பாடு உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 20 கிலோ அரிசியை கடந்த அரசாங்கம் மக்களுக்கு விநியோகித்தது.

சிவப்பு அரிசி பயன்படுத்தாத மக்களுக்கும் சிவப்பு அரிசி விநியோகிக்கப்பட்டது.

இதன் காரணாகவே சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற அமர்வில் பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ முன்வைத்த சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 706ஆக உயர்வு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்வு